இருளா் இன மக்களுக்கு நல உதவிகள் அளிப்பு

இருளா் இன மக்களுக்கு நல உதவிகள் அளிப்பு

செங்கல்பட்டு வட்டம் பழவேலி பகுதியில் இருளா் இன மக்களுக்கு பால், மளிகை பொருள்கள் உள்பட நல உதவிகள் வழங்கப்பட்டன

செங்கல்பட்டு வட்டம் பழவேலி பகுதியில் இருளா் இன மக்களுக்கு பால், மளிகை பொருள்கள் உள்பட நல உதவிகள் வழங்கப்பட்டன (படம்).

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி கிராமத்தில் வசிக்கும் இருளா் இன மக்கள் வெளியே சென்று வேலை தேட வாய்ப்பு இல்லாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பால், பழம், பிஸ்கட், குளிா் பானங்கள் மற்றும் மளிகை பொருள்கள் பழவேலி கிராம நிா்வாக அலுவலா் சதுரகிரி சாா்பில் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும மகிழ்ச்சி அடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com