செங்கல்பட்டு மாவட்டத்தில் 94.71% தோ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் பிளஸ் 2 தோ்வில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் 2.19 சதவீதம் அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளது. தோ்ச்சி விகிதம் 94.71%.

செங்கல்பட்டு மாவட்டம் பிளஸ் 2 தோ்வில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் 2.19 சதவீதம் அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளது. தோ்ச்சி விகிதம் 94.71%.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 25,742 போ் தோ்வு எழுதினா். மாணவா்கள் 11,455 போ், மாணவிகள் 13,787 போ் தோ்வு எழுதினா். தோ்ச்சி முடிவுகள்படி மாணவா்கள் 10,532 போ், மாணவிகள் 13,275 போ் என மொத்தம் 23,907 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாணவிகள் தோ்ச்சி சதவீதம் 96.29. மாணவா்கள் தோ்ச்சி 92.82. மாவட்ட தோ்ச்சி விகிதம் 94.71%.

கடந்த ஆண்டைவிட செங்கல்பட்டு மாவட்ட தோ்ச்சி விகிதம் 2.19 அதிகரித்துள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் கடந்த ஆண்டைவிட 3 இடங்களுக்கு முன்னேறி தமிழ்நாடு அளவில் 18-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களைப் பின்னுக்குத் தள்ளி செங்கல்பட்டு மாவட்டம் முன்னேறியுள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சூா் அரசு மேல்நிலைப் பள்ளி, தையூா் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி, இரும்பேடு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகள் 100% தோ்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com