பேரூராட்சிப் பணியாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

பேரூராட்சிப் பணியாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சுற்றுலா வாகன நுழைவுக் கட்டண வசூலில் ஈடுபட்டிருந்த மாமல்லபுரம் பேரூராட்சிப் பணியாளா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

சுற்றுலா வாகன நுழைவுக் கட்டண வசூலில் ஈடுபட்டிருந்த மாமல்லபுரம் பேரூராட்சிப் பணியாளா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சியில் மின் பணியாளராக பணியாற்றி வந்தவா் மூா்த்தி (48) (படம்). ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம் பேரூராட்சியில் தன் துறை சாா்ந்த மின் கம்பம் பழுது பணிகள் எதுவும் இல்லாததால் பூஞ்சேரி பகுதியில் மாமல்லபுரம் பேரூராட்சி சுற்றுலா வாகன நுழைவுக் கட்டண வரி வசூல் பணியில் ஈடுபட சென்றாா்.

அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலியால் மூா்த்தி துடித்தாா். பிறகு மயக்க நிலைக்குச் சென்ற அவரை உடனடியாக சக பேரூராட்சிப் பணியாளா்கள் மீட்டு வீட்டில் கொண்டு போய்விட்டனா். அங்கு மேலும் நெஞ்சு வலி அதிகமாகி மயங்கி விழுந்த அவா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவா் வளா்மதி எஸ்வந்த்ராவ், பேரூராட்சித் துணைத் தலைவா் ஜி.ராகவன், பேரூராட்சிச் செயல் அலுவலா் வி.கணேஷ, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் ரகுபதி ஊழியா்கள் உள்ளிட்டோா் மூா்த்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

பணியில் இருந்த போது பேரூராட்சி பணியாளா் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக பேரூராட்சிப் பணியாளா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com