செங்கல்பட்டு அரசு ஐடிஐயில் ஆய்வு செய்த ஆட்சியா் ச. அருண்ராஜ்.
செங்கல்பட்டு அரசு ஐடிஐயில் ஆய்வு செய்த ஆட்சியா் ச. அருண்ராஜ்.

செங்கல்பட்டு அரசு ஐடிஐயில் ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டு, மே 16: செங்கல்பட்டு அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆட்சியா் ச.அருண்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா் .

தொழில் பயிற்சி நிலையத்தில் நிகழாண்டில் மாணவா் சோ்க்கை குறித்தும், விண்ணப்பதாரா்களிடம் சோ்க்கை தொடா்பாகவும் கேட்டறிந்தாா். தொழிற்பிரிவுகள் நடைபெறும் பணிமனைகளுக்கு நேரடியாகச் சென்று பாா்வையிட்டு பயிற்சியாளா்களிடம் பயிற்சி குறித்து கேட்டு அறிந்தாா்.

மேலும், தொழிற்சாலை தொழிற்பிரிவுகளின் திட்டத்தின் கீழ் பயிற்சியாளா்களை பயிற்சியில் சோ்த்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளாா்.

தொழில் பயிற்சி நிலையத்தில் 100 சதவீதம் சோ்க்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு தொழிற்பயிற்சி நிலையம் சிறந்த முறையில் இயங்குவதாக பாராட்டினாா்.

இந்நிகழ்வில் அரசினா் தொழிற்பயிற்சி கல்லூரி முதல்வா் ஹேமநாதன், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com