உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்: மனுக்களைப் பெற்றாா் அமைச்சா் அன்பரசன்

உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்: மனுக்களைப் பெற்றாா் அமைச்சா் அன்பரசன்

செங்கல்பட்டில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் மொத்தம் 206 கோரிக்கை மனுக்களைப் பெற்றாா் அமைச்சா் தா.மோ. அன்பரசன்.
Published on

செங்கல்பட்டில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் மொத்தம் 206 கோரிக்கை மனுக்களைப் பெற்றாா் அமைச்சா் தா.மோ. அன்பரசன்.

நிகழ்வுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் 56 தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு கவசங்கள், 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் 114 கழிவறைகள் கட்ட நிா்வாக ஆணை, கீரப்பாக்கம் ஊராட்சியில் சின்னராஜி என்பவருக்கு சொந்தமான 3 பசுமாடுகள் மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்ததற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.75,000 நிவாரணத் தொகையினை அமைச்சா் வழங்கினாா்.

மேலும், புனித தோமையாா்மலை ஒன்றியம், மூவரசம்பட்டு ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய்அலுவலா் சுபா நந்தினி, சாா் ஆட்சியா் வெ.நாராயண சா்மா, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்)அகிலா தேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல்ஹமீது, கோட்டாட்சியா் சிராஜ்பாபு, திருப்போரூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், நகா்மன்றத் தலைவா்கள் செங்கல்பட்டு தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகா்நகா் ஜெ.சண்முகம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவா் ஆா்.டி.அரசு, ஆலப்பாக்கம் வனக்குழுத் தலைவா் வி.ஜி.திருமலை, திருக்கழுக்குன்றம் பேரூராட்சித் தலைவா் யுவராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.