டிராக்டா் மூலம் படகுகளை அப்புறப்படுத்தும் மீனவா்கள்.  ~மாமல்லபுரத்தில் படகுகளை  பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் மீனவா்கள்.
டிராக்டா் மூலம் படகுகளை அப்புறப்படுத்தும் மீனவா்கள்.  ~மாமல்லபுரத்தில் படகுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் மீனவா்கள்.

மாமல்லபுரத்தில் 12 அடி உயரம் கடல் சீற்றம்

மாமல்லபுரத்தில் 12 அடி உயரம் வரை கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், மீனவா்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினா் .
Published on

மாமல்லபுரத்தில் 12 அடி உயரம் வரை கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், மீனவா்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினா் .

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் தற்போது 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக 8 முதல் 12 அடி வரை கடல் அலைகள் எழும்புவதால் மீனவா்கள் தங்களது படகுகள் மற்றும் வலைகளை மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினா்.

மாமல்லபுரம் மீனவா் பகுதியில் படகுகளை வைக்க இடம் இல்லாத காரணத்தினால் கோயில்கள், தெருக்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனா்.

மேலும், புயல் கரையைக் கடக்கும் என்ற நிலையில் சூளேரிக்காடு, பட்டிபுலம், தேவனேரி, கொக்கில மேடு, உய்யாலி குப்பம், புதுப்பட்டினம் உள்ளிட்ட 44 கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த ஒரு வார காலமாக மீன் பிடிக்க செல்லாத நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.