சூரக்குட்டை லட்சுமி நரசிம்மா் கோயில் குடமுழுக்கு

மதுரந்தகம் நகராட்சி சூரக்குட்டை லட்சுமி நரசிம்மா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

மதுரந்தகம் நகராட்சி சூரக்குட்டை லட்சுமி நரசிம்மா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலுக்கு கடந்த 25 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் செய்யப்படவில்லை. இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு, கோயிலின் அனைத்து சுவாமி சந்நிதிகளும் புதுபிக்கப்பட்டன.

இதையடுத்து கடந்த 27-ஆம் தேதி புதன்கிழமை மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை யாகசாலையில் இருந்து வெங்கடேச பட்டாச்சாரியா் முன்னிலையில், லட்சுமி நரசிம்ம சுவாமி அறக்கட்டளை நிறுவனா் வேணுதாச சுவாமி தலைமையில் குடமுழுக்கு நடைபெற்றது.

இதில், மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, நகா்மன்ற உறுப்பினா் கே.குமாா் உள்பட திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com