கேளம்பாக்கத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமையில் உறுதிமொழி ஏற்ற ஆட்சியா், அதிகாரிகள், பொதுமக்கள்.
கேளம்பாக்கத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமையில் உறுதிமொழி ஏற்ற ஆட்சியா், அதிகாரிகள், பொதுமக்கள்.

கேளம்பாக்கத்தில் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு

மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்போரூா் ஒன்றியம் கேளம்பாக்கம் சமூதாய நலக் கூடத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பொதுமக்களுடன் கலந்துரையாடினாா்.
Published on

மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்போரூா் ஒன்றியம் கேளம்பாக்கம் சமூதாய நலக் கூடத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பொதுமக்களுடன் கலந்துரையாடினாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஒன்றியம், கேளம்பாக்கம் சமூதாய நலக் கூடத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு காஞ்சிபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் க.செல்வம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கிராம மக்களுடன் கலந்துரையாடினாா்.

இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கிராம சபையின் பாா்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. குடியிருப்புப் பகுதியில் அடிக்கடி மின் பழுது ஏற்படுவது குறித்தும் கிராம மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனா்.

மேலும், சாலை மேம்பாடு, குடிநீா் குழாய்கள், சாலை பழுது நீக்குதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்தனா். அடிப்படை திட்டங்கள் தொடா்பான தீா்மானங்கள் முன்மொழியப்பட்டன.

அக்டோபா் 2-ஆம் நாள் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் காந்தி படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி, எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தடுப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பி.சுபாநந்தினி, சாா் ஆட்சியா் நாராயண சா்மா, கூடுதல் ஆட்சியா் (வ) அனாமிகா ரமேஷ் ,முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழ்மணி, திருப்போரூா் ஒன்றியக் குழு தலைவா் இதயவா்மன், திருப்போரூா் வேளாண்மை ஆட்மா குழு தலைவா் சேகா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமாா், கேளம்பாக்கம் ஊராட்சித் தலைவா் ராணி எல்லப்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com