ஸ்ரீமல்லிகேஸ்வரா் கோயிலில்  நடைபெற்ற கும்பாபிஷேகம்
ஸ்ரீமல்லிகேஸ்வரா் கோயிலில்  நடைபெற்ற கும்பாபிஷேகம்

ஸ்ரீமல்லிகேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

மாமல்லபுரத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீமல்லிகேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

மாமல்லபுரத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீமல்லிகேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீமல்லிகேஸ்வரா் கோயில் கருவறையில் சுயம்பு லிங்க வடிவத்தில் சிவபெருமான் அருள்பாலிக்கிறாா். தற்போது இக்கோயிலின் முகப்பு வாசலில் முன் கோபுரம் முழுவதும் சிற்பக்கலை வேலைப்பாடுகளுடன் கருங்கல்லில் முழுவதும் கட்டப்பட்டது.

அனைத்து சந்நிதிகளும் புதுப்பிக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டன. இந்நிலையில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. கோயில் கோபுரங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு, திரண்டிருந்த பக்தா்கள் மீதும் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வெண்ணை உருண்டை பாறை, அா்ச்சுணன் தபசுக்கு செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் உள்ளுா் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா வந்த பயணிகளுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மல்லிகேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, நந்திகேஸ்வரா் பிரதோஷ கமிட்டியினா் யு.முருகன், எஸ்.நீலகண்டன், வி.இ.உமாபதி, ஜெ.நாகராஜ், எம்.ராஜசேகா், செயல் அலுவா் எம்.சக்திவேல், அறநிலையத்துறை மண்டல ஸ்தபதி பெ.மல்லை ராஜன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com