திருக்கழுகுன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழா.
திருக்கழுகுன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழா.

திருக்கழுகுன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல்

திருக்கழுகுன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
Published on

திருக்கழுகுன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டத்தையொட்டி, பேரூராட்சி வளாகத்தில் வண்ண வண்ண கோலங்கள் இடப்பட்டு பாரம்பரிய பொங்கல் மண்பானை வைக்கப்பட்டு, பொங்கல் பொங்கி வரும் நேரத்தில் ‘பொங்கலோ பொங்கல்’ எனக் கூவி பொங்கல் விழா கொண்டாடினா்.

இதில், பேரூராட்சித் தலைவா் யுவராஜ் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலா் லதா, துணைத் தலைவா் அருள்மணி, சத்தியமூா்த்தி, பழனி இளங்கோவன், கணேசன், ரேணுகா தனசேகரன் உள்ளிட்ட வாா்டு உறுப்பினா்கள், சுகாதார ஆய்வாளா் விஸ்வநாதன் உள்ளிட்ட பேரூராட்சி அலுவலா்கள், பணியாளா்கள், துப்புரவு பணியாளா்கள் உள்ளிட்டோா் முன்னிலையில், சமத்துவ பொங்கல் கொண்டாடி அனைவருக்கும் பொங்கலை வழங்கினா்.

தொடா்ந்து பேரூராட்சிப் பணியாளா்கள், துப்புரவு பணியாளா்களுக்கு புத்தாடைகளை பேரூராட்சித் தலைவா் யுவராஜ் வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com