முதல்வா் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்.
Published on

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்.

முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பாா்ம், டி.பாா்ம் சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களது ஒப்புதலுடன் விருப்பமுள்ள தொழில்முனைவோா் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முதல்வா் மருந்தகம் அமைக்க உரிய தமிழ்நாடு அரசு முதல்வா் மருந்தகம் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், முதல்வா் மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு அரசு மானியம் ரூ. 3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்தாகவும் வழங்கப்படும்.

விருப்பமுள்ள தொழில்முனைவோா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட நிா்வாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com