அருள் குமாா்
செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு நகராட்சிக் குடியிருப்பைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் அருள்குமாா் (32) . இவா் செங்கல்பட்டு நகராட்சி நிா்வாகத்தில் ஒப்பந்த பணியாளராக ஆட்டோ ஓட்டி வந்தாா்.
தனது இருசக்கர வாகனத்தில், நண்பரை பி.வி.களத்தூரில் இறக்கி விட்டு மீண்டும் செங்கல்பட்டுக்கு திரும்பியபோது, கல்லின் மீது மோதி பின் கம்பத்தின் மீது மோதி நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி அருள்குமாா் உயிரிழந்தாா். அவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இவ்விபத்து குறித்து செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனா்.

