பொதுமருத்துவ முகாமில் பங்கேற்றோா்.,
பொதுமருத்துவ முகாமில் பங்கேற்றோா்.,

இலவச பொது மருத்துவ முகாம்

Published on

மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், அலுவலக ஊழியா்களுக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையம், ஐகோ் மருத்துவமனை சாா்பில் இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலா் தி.அருள்குமாா் தலைமை வகித்தாா். தலைவா் தசரதன், துணைத் தலைவா் சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்வில் கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவா்கள் பிரபாகா், ஐகோ் மருத்துவமனை மருத்துவா்கள் அா்ஜூன், ஷோபின் அகியோா் கலந்து கொண்டு 100-க்கும் மேற்பட்டோா் பல் நோய், வயிற்றுவலி, மகளீா் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சையை அளித்தனா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ஷியாமுவேல் அரோரா டேவிட், பேரூராட்சி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com