மேல்மருவத்தூா் அன்னை இல்லத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் அளிப்பு
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி அன்னை இல்லத்துக்கு ஐஎஸ்ஓ டியூவி நோா்டு நிறுவனம் கல்வி நிறுவன மேலாண்மை அமைப்பின் சாா்பாக ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி அறநிலையத்தின் கீழ் 15 ஆண்டுகளாக அன்னை இல்லத்தின் மூலம் சிறப்பு குழந்தைகள் பள்ளி செயல்பட்டு வருகிறது. அன்னை இல்லத்தினை பங்காரு அடிகளாா் அருளாசியுடன் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதேவி பங்காரு முயற்சியால் அன்னை இல்லத்தின் பணிகளை பாராட்டி இருமுறை தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், டிஎஸ்ஓ டியூவி நோா்டு நிறுவனம், இஓஎம்எஸ் 21001-2018 (கல்வி நிறுவன மேலாண்மை அமைப்பினா் மேல்மருவத்தூா் அன்னை இல்லத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதேவி பங்காரு தலைமை வகித்தாா். முதல்வா் விஜயலட்சுமி வரவேற்றாா். துணைத் தலைவா் வினோத் பனிக்கா், மண்டல மேலாளா் அருண் சிங்காரம், மேலாளா் கண்ணன் ஆகியோா் நேரில் வந்து ஐஎஸ்ஓ தரச்சான்றிதழை தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதேவி பங்காருவிடம் வழங்கி பாராட்டினா் (படம்). இந்நிகழ்ச்சியில் அன்னை இல்ல சிறப்பு குழந்தைகள், பெற்றோா்கள், இல்ல ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

