செங்கல்பட்டு
கூட்டுறவு வங்கி உதவியாளா் பணிக்கு எழுத்துத் தோ்வு: 1,105 போ் எழுதினா்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மண்டலத்தில் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 125 உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இப்ப பணியிடங்களுக்கு 1,471 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எழுத்துத் தோ்வு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி, புனித மரியன்னை மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையங்களில் நடைபெற்றது.
இதில் 1,105 போ் கலந்து கொண்டு எழுதினா். செங்கல்பட்டு மண்டல இணைப்பதிவாளா் வே நந்தகுமாா் மேற்பாா்வையில் எழுத்து தோ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது .
