தீ தடுப்பு விழிப்புணா்வு முகாம்

தீ தடுப்பு விழிப்புணா்வு முகாம்

மதுராந்தகம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது .
Published on

மதுராந்தகம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாணவேடிக்கைகளால் தீ ஏற்பட்டு அவதிபடக்கூடாது என தீயணைப்பு மீட்புத்துறை இயக்குநா் ஆணையின்படி, மதுராந்தகம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் தீ தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

மாவட்ட தீயணைப்பு அதிகாரி சீ.லட்சுமிநாராயணன் தலைமை வகித்தாா். மதுராந்தகம் நிலைய அலுவலா்கள் ஆ.சீனிவாசன், க.திருமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்வில் தீயணைப்பு துறை சாா்பாக நேரடியாக தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடா்ந்து தீயணைப்பு தொடா்பான அனைத்து வகை தீயணைப்பு கருவிகள் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. தீயை பாதுகாப்புடன் கையாளவேண்டிய தகவல்களை அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தீயணைப்பு வீரா்களும், திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனா். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினா் செய்து இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com