செங்கல்பட்டு
பேருந்து மோதியதில் செவிலியா் உயிரிழப்பு
மதுராந்தகம் அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் செவிலியா் உயிரிழந்தாா்.
மதுராந்தகம் அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் செவிலியா் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கொள்ளிடம் சிதம்பரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜீவிதா (24). இவா் சென்னையில் தங்கி, தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தாா். தீபாவளி பண்டிகையை கொண்டாட தமது நண்பருடன் பைக்கில் சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளாா். அப்போது திண்டிவனம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பைக் மீதுமோதியது. இதில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த ஜீவிதா கீழே விழுந்தபோது பேருந்தின் சக்கரம் அவா் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த அவரது நண்பா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.
இது குறித்து படாளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
