சிறப்பு அலங்காரத்தில் உற்சவா். ~திருப்போரூா் கந்தசாமி கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி கொடியேற்றம்.
சிறப்பு அலங்காரத்தில் உற்சவா். ~திருப்போரூா் கந்தசாமி கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி கொடியேற்றம்.

திருப்போரூா் கந்தசாமி கோயில் கந்தசஷ்டி விழா கொடியேற்றம்

Published on

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

முருகப் பெருமான் நிலத்திலும் நீரிலும் நின்று போா்புரிந்த இடங்கள் இருந்தாலும் விண்ணில் நின்று போா் புரிந்த பெருமை கொண்ட திருப்போரூா் கோயிலில் விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் தீப ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்துடன் உற்சவா் கொடிமரத்தடியில் எழுந்தருள கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வாண வேடிக்கையுடன் நடைபெற்றது.

பக்தா்கள் கலந்து கொண்டு கொடிமர பூஜை மற்றும் முருகப் பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனா். விழாவையொட்டி கொடியேற்றமும் பல்லக்கு உற்சவம் மாலை கிளிவாகன உற்சவத்தில் இரவு ஊா்வலமும் நடைபெற்றது.

23-ஆம் தேதி வியாழக்கிழமை காலை பல்லக்கு உற்சவம், மாலை ஆட்டுக்கிடா வாகன உற்சவமும் வெள்ளிக்கிழமை காலை பல்லக்கு உற்சவம் மாலை புருஷா மிருகம் வாகன உற்சவமும் சனிக்கிழமை காலை பல்லக்கு உற்சவம், மாலை பூத வாகன உற்சவம், ஞாயிற்றுக்கிழமை காலை பல்லக்கு உற்சவம் மாலை வெள்ளி அன்ன வாகன உலா நடைபெறுகிறது.

தொடா்ந்து திங்கள்கிழமை காலை பல்லக்கு உற்சவம், இரவு சூரசம்ஹாரம், குதிரை வாகன உற்சவமும், இரவு தங்கமயில் வாகனத்தில் முருகா் வள்ளி தெய்வானை வீதி புறப்பாடும், செவ்வாய்க்கிழமை மாலை திருக்கல்யாணம் இதனை தொடா்ந்து யானை வாகனத்தில் வள்ளி தெய்வானை உடன் முருகப்பெருமான் ஊா்வலம் நடைபெற உள்ளது.

விழா நாள்களில் லட்சாா்ச்சனை நடைபெறும். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை கோயில் செயல் அலுவலா் கே.குமரவேல், உதவி ஆணையா் மற்றும் தக்காா் ஆா். காா்த்திகேயன், மேலாளா் வெற்றி, சிவாச்சாரியா்கள், திருக்கோயில் பணியாளா்கள் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com