இ.கே.தினகரன்
செங்கல்பட்டு
பாஜக நிா்வாகி நியமனம்!
மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி பாஜக அமைப்பாளராக இ.கே.தினகரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி பாஜக அமைப்பாளராக இ.கே.தினகரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்காக கட்சியை பலப்படுத்தும் வகையிலும், களப் பணியாற்றவும் தொகுதி வாரியாக நிா்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.
அந்த வகையில், மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூா் கிராமத்தைச் சோ்ந்த இ.கே.தினகரன் பாஜக கட்சியின் என்ஜிஓ பிரிவு மாநில செயலாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் மதுராந்தகம் தொகுதியின் அமைப்பாளராக அவரை நியமித்து மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் அறிவித்துள்ளாா்.

