சென்னை, டிச. 11: விடுமுறை கால சிறப்பு பயிற்சியாக ஆடை வடிவமைப்புப் பயிற்சி டிசம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது.
மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் குழந்தைகளின் ஆடைகள், ஜாக்கெட், சுடிதார், பொம்மை வடிவமைப்பு, மலர் அலங்காரம், பெயின்டிங், நகை வடிவமைப்பு, மருதாணி தீட்டுதல் (மெகந்தி) உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுத் தரப்படும்.
ஒவ்வொரு பிரிவுக்கும் 5 நாள் முதல் 30 நாள் வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டையில் செயல்படும் ஆடைவடிவமைப்பு பயிற்சி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
044-22500121 என்ற தொலைபேசி எண், 98404 78534, 99403 40423 என்ற மொபைல் போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.