சென்னை, டிச. 11: ஓய்வு பெற்ற பெண் அதிகாரியிடம் இரு ஹெல்மெட் கொள்ளையர்கள் 12 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
சென்னை சின்னமலையைச் சேர்ந்தவர் குணசீலி (62). உணவுத்துறை முன்னாள் இணை ஆணையர். இவர் தனது வீட்டுக்கு தேவையான பொருள்களை வெள்ளிக்கிழமை இரவு தியாகராயநகரில் வாங்கினார். பொருள்களை மார்க்கெட்டில் வாங்கிவிட்டு குணசீலி திரும்பியுள்ளார்.
வீட்டுக்கு திரும்புவதற்காக சின்னமலை பகுதியில் குணசீலி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஹெல்மெட் கொள்ளையர்கள், குணசீலி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்து குணசீலி கோட்டூர்புரம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.