சென்னை, டிச.18: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் விழிப்புணர்வு பிரிவுக்கு கூடுதல் டிஜிபி நியமனம் செய்வது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மின்வாரியத்தின் விழிப்புணர்வு பிரிவுக்கு கூடுதல் டிஜிபி நியமனம் எப்போது என்ற தலைப்பில் தினமணி நாளிதழில் சனிக்கிழமை (டிச.18) செய்தி வெளியானது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அளித்துள்ள விளக்கம்:
நேர்மையற்ற வழிகளில் மின்சாரத்தைப் பயன்படுத்துதல், மின் திருட்டு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாதாந்திர மின் கட்டணம் ரூ. 50 லட்சத்துக்கும் மேல் செலுத்தும் உயர் அழுத்த மின் நுகர்வோர்களின் மின் இணைப்புகளை, அவர்களின் உற்பத்தியின் அடிப்படை உள்ளிட்டவற்றை உடனே ஆய்வு செய்யுமாறு மேற்பார்வை பொறியாளர், மின் பகிர்மான வட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாதாந்திர மின் கட்டணம் ரூ. 1 கோடிக்கும் அதிகமாகச் செலுத்தும் உயர் அழுத்த மின் நுகர்வோர்களின் மின் இணைப்புகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
மின்வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து கடந்த ஜூலை 19-ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
அப்போது, மின் இழப்பை குறைத்தல் மற்றும் தவறான வழிகளில் மின்சாரத்தை பயன்படுத்துவோரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, மின் திருட்டைத் தடுக்கும் பொருட்டு ஒரு கண்காணிப்புக் குழுவினை அமைத்து 5.10.2010-ல் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மின் ஆய்வாளர், அந்தந்த ஆட்சி பகுதியின் துணை வட்டாட்சியாளர்கள், அந்தந்த பகுதியின் காவல்துறை துணை ஆணையாளர்கள், அரசு தலைமை மின் ஆய்வாளர் ஆய்வுகூடத்தின் மின் பரிசோதகர், அரசு தலைமை மின் ஆய்வாளர் ஆய்வுக்கூடத்தின் உதவியாளர் இடம் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் திருட்டு மற்றும் மின்சாரம் உபயோகிக்கும் முறை பற்றிய தகவல்களை என்ற இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்க்ஷ.ண்ய் அறிந்து கொள்ளலாம்.