வரி வசூலில் மெத்தனம்: உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் பாதிப்பு: சிஏஜி தகவல்

சென்னை, ஜன.12: உள்ளாட்சி அமைப்புகள் வரி வசூலில் மெத்தனம் காட்டியதால் கோடிக் கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கை (சிஏஜி) அதிகாரி சங்கர் நாராயணன் தெரிவித்துள்ளார். 2007-

சென்னை, ஜன.12: உள்ளாட்சி அமைப்புகள் வரி வசூலில் மெத்தனம் காட்டியதால் கோடிக் கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கை (சிஏஜி) அதிகாரி சங்கர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

2007-08-ம் நிதி ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிர்வாக செயல்பாடுகளை தணிக்கை செய்ததில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் சங்கர நாராயணன் கூறியது:

2004 முதல் 2008 வரையான காலத்தில் 196 காற்றாலைகளிடமிருந்து சொத்துவரி, உரிமக் கட்டணம், அரையாண்டுக் கட்டணம் ஆகியவற்றை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பனகுடி பேரூராட்சி வசூலிக்கத் தவறியதால் ரூ. 3.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இரு பேரூராட்சிகள் புதிய குடிநீர் இணைப்புகள் அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் ரூ. 2.06 கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள 53 பேரூராட்சிகள் ரூ.99.17 லட்சம் குடிநீர் வரியை விதிக்கவில்லை. மேலும் நான்கு பேரூராட்சிகள் போதுமான நிதியிருந்தபோதிலும் உலக வங்கி மற்றும் மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெற்ற கடன்களை தீர்வு செய்யாததால் ரூ. 15.75 லட்சம் வட்டியைச் செலுத்தின.

அத்துடன் கிராமப்புற ஏழை மக்களின் உறுதியற்ற வீடுகளைத் தரமுயர்த்துவதற்கான மத்திய அரசின் "ஸ்வர்ண ஜெயந்தி சஹாகாரி ரோஜ்கார் யோஜனா' திட்டத்துக்கான ஒதுக்கீடான ரூ. 1.20 கோடி நிதியைப் பயன்படுத்தத் தவறின.

கொளச்சல், மயிலாடுதுறை, நெல்லிக்குப்பம், பெரியகுளம், புதுக்கோட்டை ஐந்து நகராட்சிகள் குடிநீர் வழங்கல் இணைப்புக்கான வைப்பீட்டுத் தொகை வசூலிக்கவும், கொளச்சல் நகராட்சி உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை வசூலிக்கத் தவறியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ. 3.16 கோடி. பல்லடம் நகராட்சி புதிய குடிநீர் இணைப்புகளை வழங்காததால் வருவாய் இழப்பு ரூ. 1.89 கோடி என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com