சென்னை: 800 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

சென்னை, ஜன. 29: சென்னையில் 800 வாக்குச்சாவடிகள் பதற்றம் ஏற்பட்ட வாய்ப்புள்ளவை என்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் ராதாகிருணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட 16 சட்டப் பேரவைத் தொக
Published on
Updated on
1 min read

சென்னை, ஜன. 29: சென்னையில் 800 வாக்குச்சாவடிகள் பதற்றம் ஏற்பட்ட வாய்ப்புள்ளவை என்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் ராதாகிருணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்கள் 29 லட்சத்து 31,203 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆண்கள் 14 லட்சத்து 65,769. பெண்கள் 14 லட்சத்து 65,434. இந்நிலையில், சட்டப் பேரவைத் தேர்தல் மே மாதம் 10-ம் தேதிக்குப் பின் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இதையடுத்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் திருத்தப் பணிகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆயத்த நிலையில் வைத்தல் மற்றும் தேர்தலுóககான இதர பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

 முதல் கட்டமாக அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடிகளை வரையறை செய்து, வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள 2,415 பகுதிகளில் இதுவரை 3,225 வாக்குச் சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த வாக்குசாவடிகளுக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பழைய குற்றவாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, போலீஸôர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

 இந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 தேர்தல் நெருங்கும் நேரத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம்:

 சென்னையில் இப்போது சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாக்குóசசாவடிகளின் எண்ணிக்கை விவரம்:

 ராதாகிருஷ்ணன் நகர்- 218, பெரம்பூர்- 230, கொளத்தூர்- 195, வில்லிவாக்கம்- 212, திருவிக நகர்- 174, எழும்பூர்- 178, ராயபுரம் 166, துறைமுகம்- 157, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- 184, ஆயிரம் விளக்கு- 203, அண்ணாநகர்- 216, விருகம்பாக்கம்- 227, சைதாப்பேட்டை 208, தியாகராயநகர்- 187, மயிலாப்பூர்- 220, வேளச்சேரி- 250.

 சென்னையில் உள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் 2,242 வாக்குச்சாவடி அலுவலர்கள் (பி.எல்.ஓ.) இப்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com