சென்னை, ஜூலை 3: ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிறுவனத்தின் ஒரு அங்கமான ஸ்ரீராம் இலக்கியக் கழகம் இப்போட்டிகளை நடத்துகிறது.
வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இப்போட்டிகள் நடைபெறும். சென்னையை பொறுத்தவரை ஜூலை 16-ல் டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் போட்டிகள் நடைபெறும்.
இதைத் தவிர, வேலூர், கோவை, சேலம், நெல்லை, மதுரை, திருச்சி, புதுவை ஆகிய நகரங்களில் முறையே ஜூலை 17, 23, 24, 30, 31 மற்றும் ஆகஸ்ட் 6, 7 ஆகிய தேதிகளில் முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெறுகிறது.
மூன்று சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை அருகே உள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளையிலோ அல்லது சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்திலோ பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 044 - 4223 6000.