சென்னை,ஜூலை 9: சென்னையில் இலங்கை அரசைக் கண்டித்து தமிழ் இளைஞர் எழுச்சி பாசறை சார்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் முன் இந்த அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தால் கோடம்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸôர், போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரையும் கைது செய்தனர்.
இலங்கையுடனான பொருளாதார உறவை துண்டிக்க வலியுறுத்தியும், தமிழக மீனவர்களை சுடும் இலங்கை அரசை கண்டித்தும், ஈழத் தமிழர்களை கொலை செய்யும் ராஜபட்சவை கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.