சென்னை, ஜூலை 14: காமராஜரின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
காலை 9 மணிக்கு அண்ணா சாலை ஜிம்கானா கிளப் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு மாலை அணிவிக்கிறார்.
9.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் படத்துக்கு அவர் மாலை அணிவிக்கிறார். 10 மணிக்கு தியாகராய நகர் திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது படத்துக்கு தங்கபாலு மாலை அணிவிக்கிறார்.
பின்னர், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை அவர் வழங்க இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில அலுவலகச் செயலாளர் ஆர். தாமோதரன் தெரிவித்துள்ளார்.