சென்னை, ஜூலை 23: ஜவுளிப் பொருள்கள் மீதான 5 சதவீத மதிப்புக் கூட்டு வரியை (வாட்) ரத்து செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி நன்றி தெரிவித்துள்ளார்.
ஜவுளி வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஜவுளிப் பொருள்கள் மீதான "வாட்' உடனடியாக முதல்வர் ரத்து செய்துள்ளார்.
இதன் மூலம் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்காக முதல்வருக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.