குரூப் 2 தேர்வு: தமிழ் எளிது; பொது அறிவு கடினம்

சென்னை, ஜூலை 30: தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வில் தமிழ் மொழி தொடர்பான கேள்விகள் எளிதாகவும், பொது அறிவு தொடர்பான கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் கு
Published on
Updated on
1 min read

சென்னை, ஜூலை 30: தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வில் தமிழ் மொழி தொடர்பான கேள்விகள் எளிதாகவும், பொது அறிவு தொடர்பான கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் குரூப் 2 தேர்வு 103 மையங்களில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. 4.8 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர்.

காலியாக உள்ள 6 ஆயிரத்து 695 இடங்களுக்கு இத்தேர்வு நடைபெற்றது. மொத்தம் உள்ள 200 கேள்விகளில் 100 கேள்விகள் மொழிப்பாடம் தொடர்பாகவும், மீதமுள்ள 100 கேள்விகள் பொதுஅறிவு தொடர்பாகவும் கேட்கப்பட்டிருந்தன.

இதில் தமிழ் மொழி தொடர்பான கேள்விகள் எளிதாகவும், பொது அறிவு தொடர்பான கேள்விகள் கடினமானதாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டாலும் வெற்றி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் இன்னும் ஒதுக்கப்படவில்லை.

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்போது நடைபெற்று முடிந்துள்ள குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாக 3 மாதங்களுக்கு மேல் ஆகலாம் என அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆர்வத்துடன் பங்கேற்பு: இந்துக்களின் முக்கிய தினமாக கருதப்படும் ஆடி, அமாவாசை தினமாக இருந்தாலும் பெண்கள் உள்பட பலரும் ஆர்வத்துடன் தேர்வினை எழுதினர்.

செல்போன் பிரச்னை: தேர்வு மையத்துக்குள் செல்போன் கொண்டுவர தடைவிதிக்கப்பட்டிருந்தாலும் அனைவருமே செல்போனை எடுத்து வந்திருந்தனர். செல்போன்களை ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என தேர்வு நடத்தும் அதிகாரிகள் தெரிவித்த போது அதற்கு தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஒவ்வொரு மையத்திலும் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.