சாயக்கழிவு சுத்திகரிப்பை காண குஜராத் புறப்பட்டது தமிழக குழு

சென்னை, ஜூலை 30: சாயப்பட்டறைக் கழிவு நீர் சுத்திகரிப்பு தொழில் நுட்பத்தை நேரில் காண்பதற்காக தமிழக பிரதிநிதிகள் குழு குஜராத் மாநிலத்திற்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது. திருப்பூர் பகுதியில் சாயப்
Published on
Updated on
1 min read

சென்னை, ஜூலை 30: சாயப்பட்டறைக் கழிவு நீர் சுத்திகரிப்பு தொழில் நுட்பத்தை நேரில் காண்பதற்காக தமிழக பிரதிநிதிகள் குழு குஜராத் மாநிலத்திற்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது.

திருப்பூர் பகுதியில் சாயப்பட்டறைக் கழிவுநீரை சுத்திகரிக்க 20 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வட்டியில்லா கடனாக மாநில அரசு ரூ.200 கோடி தரும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கழிவுநீரில் மாசு ஏதும் இல்லாத அளவுக்கு சுத்தம் செய்த பிறகே வெளியேற்ற வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக இரு தொழில்நுட்பங்களைக் கையாளலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குஜராத் மாநிலம் பாரூச் அருகே ஜகாடியா என்னும் இடத்தில் கையாளப்படும் தொழில்நுட்பத்தை நேரில் காண இந்தக் குழு சென்றுள்ளது. அங்கு கழிவுகள் 7 சதவீதமாக குறைக்கப்பட்டு, நீர் ஆவியாக்கப்பட்டு, குளிர்விக்கப்பட்ட நீரும், பெறப்படும் உப்பும் மீண்டும் தொழிற்சாலையிலேயே பயன்படுத்தப்படுகிறது. இதை திருப்பூரில் கடைபிடிக்க இயலுமா என்பதைக் கண்டறிவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சி.வி. சங்கர் தலைமையில், அதன் உறுப்பினர் செயலர் ஆர். ராமச்சந்திரன், இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ஆர். குமார், கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் இணை இயக்குநர் (கைத்தறி) எஸ். நாகராஜ், திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் பி.ஏ. மாதேஸ்வரன், செயற்குழு உறுப்பினர் கே.கே. பத்மநாபன், அங்கேரிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலைய இயக்குநர் சி.பி. பாஸ்கரன் ஆகியோர் இக் குழுவில் சென்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.