சென்னை,ஜூலை 30: சென்னை குடிநீர் வாரியத் திட்டப் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளி வெ.சிவக்குமார் (29) மண் சரிந்து விழுந்து வெள்ளிக்கிழமை இறந்தார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் வெ.சிவக்குமார். இவர் மதுரவாயலில் சென்னை குடிநீர் வாரியத்திட்டப் பணியில் ஈடுபட்டிருந்தாராம். வெள்ளிக்கிழமை அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் மணலில் சிக்கி சிவக்குமார் இறந்தார்.
இது குறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். இது தொடர்பாக அந்த பணியின் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் கிருஷ்ணகுமார்,பீமராஜன் ஆகியோர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததால் விபத்து ஏற்பட்டதாக போலீஸார் கைது செய்தனர்.