விதிகளின்படி வாகன பதிவு எண் பலகை பொருத்த ஆகஸ்ட் 31 வரை அவகாசம்: தமிழக அரசு

சென்னை, ஜூலை 30: ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விதிகளின்படி பதிவு எண் பலகை பொருத்தப்படாத வாகனங்களின் பதிவு சான்று தாற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு சனிக
Published on
Updated on
1 min read

சென்னை, ஜூலை 30: ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விதிகளின்படி பதிவு எண் பலகை பொருத்தப்படாத வாகனங்களின் பதிவு சான்று தாற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

மத்திய மோட்டார் வாகன விதி 50, 51-ன் படி அனைத்து வாகனங்களிலும் பதிவு எண் பலகை பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

விதிகளின்படி இல்லாமல் அவரவர் விருப்பப்படி பதிவு எண்களை எழுதி வாகனங்களை இயக்கி வருவதாக பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வந்துள்ளன.

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் பதிவு எண் பலகையில் முன்புற எழுத்துக்கள், எண்களின் உயரம் 30 மி.மீ., தடிமன் 5 மி.மீ., இடைவெளி 5 மி.மீ. ஆக இருக்க வேண்டும்.

பின்புற எழுத்துக்கள், எண்களின் உயரம் 35 மி.மீ., தடிமன் 7 மி.மீ., இடைவெளி 5 மி.மீ ஆக இருக்க வேண்டும்.

கார்கள் மற்றும் இதர வாகனங்களின் பதிவு எண் பலகையில் எழுத்துக்கள், எண்களின் உயரம் 65 மி.மீ., தடிமன் 10 மி.மீ., இடைவெளி 10 மி.மீ. ஆக இருக்க வேண்டும்.

இந்த விதிகளின்படி ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பதிவு எண் பலகை பொருத்தப்படாத வாகனங்களின் பதிவு சான்று தாற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.