சென்னை, பிப்.11: அரசு நலத் திட்டங்கள், உதவிகள் குறித்து பிப்ரவரி 13-ம் தேதி தொலைபேசி மூலம் அறிய எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி: அரசு சமூக நலத் திட்டங்கள், அரசு நல உதவிகள் குறித்து பொது மக்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் அரசு உயர் அதிகாரிகளுடன் உரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 13-ம் தேதி காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் 93800 01217 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களைப் பதிவு செய்யலாம்.
பிப்ரவரி 14-ம் தேதி காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் அரசு உயர் அதிகாரிகள், மக்களைத் தொடர்பு கொண்டு உரிய விளக்கம் அளிப்பார்கள். மேலும் விவரங்களுக்கு எஸ். செந்தில்குமரன், 93800 40007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.