சென்னை, பிப். 11: மின்வாரிய பராமரிப்புப் பணிகளின் காரணமாக சென்னை தியாகராயநகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்ரவரி 13) மின் தடை இருக்கும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை மின் தடை செய்யப்படும்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
தியாகராயநகர் மையப் பகுதி: வைத்தியராமன் தெரு, பகவந்தம் தெரு, ராஜாம்மாள் தெரு, தணிகாசலம் சாலையின் ஒரு பகுதி, சில்வா பார்க் அடுக்குமாடி குடியிருப்பு.
பெருங்களத்தூர் பகுதி: புது மற்றும் பழைய பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, முடிச்சூர், இரும்புலியூர், மேற்கு தாம்பரம், வண்டலூர், கொளப்பாக்கம்.
அடையாறு பகுதி: பெசன்ட் நகர், சாஸ்திரி நகர், அடையாறு, திருவான்மியூர், எல்.பி. சாலை, எம்.ஜி. சாலை.
கொரட்டூர் பகுதி: பாலாஜி நகர், பள்ளத் தெரு, டி.வி.எஸ். நகர், அன்னை நகர், அக்ரஹாரம் வடக்கு, கிழக்கு, சென்ட்ரல் நிழற்சாலை, சக்தி நகர், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பின் ஒரு பகுதி, பாடி, டி.வி.எஸ். அவென்யூ, குமரன் நகர், தேவர் நகர்.
கொளத்தூர் பகுதி: தாதன் குப்பம், செந்தில் நகர், சாந்தி நகர், ஸ்ரீநிவாசா நகர், விவேகானந்தா நகர், டீச்சர்ஸ் காலனி, புத்தாகரம்.
சைதாப்பேட்டை கிழக்கு பகுதி: பஜார் சாலை, விநாயகம் பேட்டை, ஆலந்தூர் சாலை, கொத்தவால்சாவடி, ஜெயராம் செட்டித் தெரு, திவான் பாஷ்யம் தோட்டம், ஜோன்ஸ் சாலை, மேற்கு சி.ஐ.டி. நகர், கண்ணம்மாப்பேட்டை, தெற்கு மற்றும் மேற்கு போக் சாலை, அண்ணாசாலை ஒரு பகுதி, ஜீனீஸ் சாலை, காரணீஸ்வரர் கோயில் தெரு, சுப்ரமணிய முதலி தெரு, பழைய மாம்பலம் சாலை, கோடம்பாக்கம் சாலை, தாண்டன் நகர், வேளச்சேரி சாலை, வெங்கடாபுரம் வடக்கு அவென்யூ, ஆரோக்கியமாதா சாலை, சூடியம்மன் தெரு, மசூதி தோட்டம், சைதாப்பேட்டை, போர்ன்பேட்டை, சி.ஐ.டி. நகர் 1,2-வது பிரதான சாலை.
எண்ணூர் பகுதி: எண்ணூர், கத்திவாக்கம், எர்ணாவூர், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.