ரூ. 60 ஆயிரம் பணம் பறிப்பு: கவுன்சிலர் கணவர் கைது
சென்னை, பிப். 11: சென்னை பெருங்குடி அருகே ரூ. 60 ஆயிரம் பணத்தை பறித்ததாக அ.தி.மு.க. கவுன்சிலரின் கணவர் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பெருங்குடியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் அந்தப் பகுதி குடியிருப்போர் நலச் சங்கத்தின் பொருளாளராக உள்ளார். இவருக்கும் அந்தப் பகுதி 184 வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் அமுதாவின் கணவர் வெங்கடேசனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் பெருங்குடியில் ஒரு கடையை ஏலம் எடுப்பது தொடர்பாக இருவருக்கும் வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டதாம். ஏலம் முடிந்தபின்னர், ஏழுமலை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த வெங்கடேசனும் அவரது நண்பர்களான கார்த்திக், கண்ணன் ஆகியோரும் ஏழுமலையை தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த ஆவணங்கள், ரூ. 60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனராம். இது குறித்து ஏழுமலை, துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸôர் வெங்கடேசனை கைது செய்தனர்.