மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

தனியார் நர்சிங் கல்லூரி: தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு எப்போது?

டிசம்பர் மாதம் தேர்வு எழுதிய நர்சிங் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்ச்சிப் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் அடுத்த தேர்வுக்குத் தயாராக முடியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Updated On :10 ஏப்ரல் 2013, 4:04 am IST

டிசம்பர் மாதம் தேர்வு எழுதிய நர்சிங் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்ச்சிப் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் அடுத்த தேர்வுக்குத் தயாராக முடியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளைச் சேர்த்து மொத்தம் 23 நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இது தவிர, தனியார் நர்சிங் கல்லூரிகள் 18 உள்ளன. இதில் அரசு நர்சிங் கல்லூரிகளில் 3000 மாணவர்களும், தனியார் நர்சிங் கல்லூரிகளில் 2000 மாணவர்களும் படிக்கின்றனர்.

அரசு நர்சிங் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மே மாதமும், தனியார் கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பர் மாதமும் தேர்வு நடைபெறும். இந்த நிலையில், வரும் மே மாதம் முதல் அனைத்து நர்சிங் கல்லூரி மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், டிசம்பர் மாதம் தேர்வெழுதிய தனியார் நர்சிங் கல்லூரியின் முதல் மற்றும் 2ஆம் ஆண்டு மாணவர்களின் தேர்ச்சிப் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த தேர்ச்சிப் பட்டியல் பிப்ரவரி மாதம் வெளியாக வேண்டும். ஆனால், இப்போதுவரை வெளியிடப் படவில்லை என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர கடந்த மே மாதம் அரசு நர்சிங் கல்லூரி மாணவர்கள் தேர்வெழுதினர். அதில் தோல்வியுற்ற மாணவர்கள் தவறிய பாடங்களை டிசம்பர் மாதம் மீண்டும் எழுதினர். அவர்களுக்கான தேர்ச்சி முடிவுகளும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதனால், அடுத்த மாதம் (மே) 2ஆவது அல்லது 3ஆவது வாரத்தில் தேர்வுகள் நடக்க இருப்பதால் ஏற்கெனவே எழுதிய தேர்வுகளின் தேர்ச்சிப் பட்டியல் விரைவில் வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து நர்சிங் கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறியது:

அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தலாம் என்று போர்டு ஆப் நர்சிங் திட்டமிட்டுள்ளது. கடந்த டிசம்பரில் தனியார் கல்லூரி மாணவர்களும், தேர்வில் தவறிய அரசுக் கல்லூரி மாணவர்களும் தேர்வெழுதினர்.

தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட்டால் அடுத்த தேர்வுக்கு தயாராவதற்கு எளிதாக இருக்கும் என்றார் அவர்.

ஜனவரியில் தயாரான தேர்வு முடிவுகள்...

டிசம்பரில் தேர்வு எழுதிய தனியார் மற்றும் அரசு நர்சிங் கல்லூரி மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஜனவரி மாதத்தின் நான்காவது வாரத்திலேயே தயாராகி விட்டதாக நர்சிங் கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து நர்சிங் கல்லூரி ஆசிரியர் ஒருவர் கூறியது: டிசம்பரில் தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஜனவரி மாதத்தில் தயாராகி விட்டது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் நர்சிங் போர்டில் கூட்டம் நடத்தி, தோல்வியுற்ற மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்களாக வழங்கி, உடனடியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

ஆனால், இந்த ஆண்டு இதுவரை நர்சிங் நிர்வாகக் கூட்டம் நடத்தவில்லை. மேலும், கல்லூரிகளிலிருந்து அனுப்பப்படும் அக மதிப்பெண்கள் (ண்ய்ற்ங்ழ்ய்ஹப் ம்ஹழ்ந்) காணவில்லை என்று கூறி திரும்ப அனுப்பச் சொல்கின்றனர். இது போன்று சில பொறுப்பற்ற தன்மையும் தேர்வு முடிவுகள் காலதாமதமாவதற்கு ஒரு காரணம் ஆகும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.