சுடச்சுட

  

  "சிட்லப்பாக்கம் ஏரியில் படகு சவாரி விட நடவடிக்கை'

  By தாம்பரம்  |   Published on : 11th February 2013 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chittlapakkam

  சிட்லப்பாக்கம் ஏரியை ஆழப்படுத்தி, படகு சவாரி விட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா கூறினார்.

  கிராம தன்னிறைவுத் திட்டத்தின்கீழ் சிட்லப்பாக்கம் எஸ்.வி.வி.அறக்கட்டளை நிறுவனர் மனிதநேய பாண்டியன் வழங்கிய ரூ 10 லட்சம்,தென்சென்னை மக்களவை உறுப்பினர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் வழங்கிய ரூ.5 லட்சம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.30 லட்சம் நிதி உதவியுடன்,ஏரிக்கரையைச் சீரமைத்து நடைபாதை,பூங்கா அமைக்கும் பணிக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  விழாவில்,சிட்லப்பாக்கம் ஏரி சீரமைப்புப்பணிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்குவதாக அறிவித்து அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பேசியது:

  சிட்லப்பாக்கம் ஏரிக்கரை சீரமைக்கப்பட்டு 750 மீட்டர் நீளமுள்ள நடை பாதையும், பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. மாவட்ட அளவில் முன்மாதிரி ஏரியாகத் திகழும் வகையில் உருவாக்கப்படவிருக்கும் சிட்லப்பாக்கம் ஏரியை ஆழப்படுத்தி அதில் படகு சவாரி விடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு ஆகியவற்றில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும் அரசு, குடிநீருக்கு ஆதாரமாகத் திகழும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாதபடி தடுப்பதிலும் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார்.

  விழாவில் தென்சென்னை மக்களவை உறுப்பினர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், தாமஸ்மலை ஒன்றியத்தலைவர் என்.சி.கிருஷ்ணன், எஸ்.வி.வி.அறக்கட்டளை நிறுவனர் மனிதநேய பாண்டியன், செயலர் புலவர் ராமலிங்கம், சிட்லப்பாக்கம் பேரூராட்சித் தலைவர் ஆர்.மோகன், வட்டாட்சியர் முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai