பணி ஓய்வு பாராட்டு விழா வேண்டாம்: நீதிபதி கே. சந்துரு

மார்ச் 8-ஆம் தேதி ஓய்வுபெறும் எனக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்த வேண்டாம் என்று தலைமை நீதிபதியைக் கேட்டுக்
பணி ஓய்வு பாராட்டு விழா வேண்டாம்: நீதிபதி கே. சந்துரு

மார்ச் 8-ஆம் தேதி ஓய்வுபெறும் எனக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்த வேண்டாம் என்று தலைமை நீதிபதியைக் கேட்டுக் கொண்டுள்ளார் உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு.

தனக்கென ஏராளமான தனித்துவங்களைக் கொண்டிருப்பவர் நீதிபதி கே. சந்துரு. பொதுவாக புத்தாண்டு தினத்தன்று பலரும் நீதிபதிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

நீதிபதி சந்துருவை யாராவது சந்திக்கச் சென்றால் பூ மாலைகள் வேண்டாம், இனிப்புகள் வேண்டாம், சால்வைகள் வேண்டாம். உங்கள் வாழ்த்துகள் மட்டும் போதும் என்ற வாசகம் அவரது அறையில் ஒட்டப்பட்டிருக்கும்.

இந்த நிலையில் தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்கு நீதிபதி சந்துரு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஓய்வுபெற்றால் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது வழக்கம். அந்த நாளில் அரசு தலைமை வழக்குரைஞர் பிரிவு உபசார நாள் வாழ்த்துரை நிகழ்த்துவதும், அதற்கு ஓய்வு பெறும் நீதிபதி ஏற்புரை நிகழ்த்துவதும், தேநீர் விருந்து கொடுப்பதும், குழுவாகப் புகைப்படம் எடுப்பதும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலோ அல்லது வேறு ஏதேனும் இடத்திலோ விருந்து ஏற்பாடு செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வெறும் சடங்காக நடத்தப்படும் இந்த நிகழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். எனவே மார்ச் 8-ஆம் தேதி நான் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில் எனக்காக அதுபோன்ற பணி ஓய்வு பாராட்டு விழா எதுவும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் இந்த நீதிமன்றத்தில் கழித்த மற்ற நாள்களைப் போலவே மார்ச் 8-ஆம் தேதியும் ஒரு சாதாரண நாளாகவே இருந்து விட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று அந்தக் கடிதத்தில் சந்துரு குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இதே உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி 1929-ம் ஆண்டில் ஓய்வுபெற்ற எம்.ஜி.எச். ஜாக்சன் என்ற ஆங்கிலேய நீதிபதி, "எனது கடமையை நான் செய்தேன்.

எனக்கு ஏன் பாராட்டு" என்று கூறி பாராட்டு விழாவை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் இப்போது நீதிபதி கே. சந்துரு பணி ஓய்வு பாராட்டு விழாவை மறுத்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 96 ஆயிரம் வழக்குகளை விசாரித்து முடித்து வைத்துள்ள சந்துரு, எப்போதும் ஏதேனும் பணிகளில் ஆழ்ந்திருப்பார்.

இந்நிலையில் நீதிபதி பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்ட போது, நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர்தான் இன்னும் நிறைய பணிகளில் ஈடுபடுவது என்று முடிவு செய்

துள்ளேன்.

குறிப்பாக சட்ட ஆலோசனை மையம் நடத்துவது, சட்ட நூல்களை பதிப்பிப்பது மற்றும் மக்கள் நலன் சார்ந்த மிக முக்கிய பிரச்னைகளில் தலையிடுவது என நிறைய திட்டம் உள்ளது என்கிறார் சந்துரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com