Enable Javscript for better performance
ரௌடி வைரம் உள்பட 6 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் பிரபல ரௌடி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மத்திய குற்றப்பிரிவின் ரௌடிகள் கண்காணிக்கும் பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் குன்றத்தூரைச் சேர்ந்த பிரபல ரௌடி வைரம், அவர் கூட்டாளிகள் குன்றத்தூரைச் சேர்ந்த கௌஸ் பாட்ஷா (30), பெரம்பூரைச் சேர்ந்த ஷாம் என்ற ஷாம்சன் (28), வியாசர்பாடியைச் சேர்ந்த கலைமணி (27) ஆகிய 4 பேரைதிங்கள்கிழமை கைது செய்தனர்.

    இதேபோல பெரம்பூரைச் சேர்ந்த ரௌடி தங்கமணி (41), திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ரௌடி மோட்டு என்ற சத்தியகிரிராவ் (27) ஆகிய இருவரையும் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai