Enable Javscript for better performance
கும்மிடிப்பூண்டி அருகே ரூ.1.20 கோடியில் கண் மருத்துவமனை- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டி அருகே ரூ.1.20 கோடியில் கண் மருத்துவமனை

    By dn  |   Published on : 03rd March 2013 03:11 AM  |   அ+அ அ-   |    |  

    gummudi

    கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர மாநிலம் தடாவில் அமைந்துள்ள ஸ்ரீ சிட்டி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 20 படுக்கைகள் கொண்ட கண் மருத்துவமனையை சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை விரைவில் திறக்க உள்ளது.

    சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், "ஸ்ரீ சிட்டி' நிர்வாக இயக்குநர் ரவீந்திர சன்னாரெட்டி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் சென்னையில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்தானது. இது தொடர்பாக டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் கூறியதாவது:

    ரூ.1.20 கோடியில்... ஆந்திர மாநில மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1.20 கோடியில் இந்த கண் மருத்துவமனை அமைய உள்ளது.

    ஸ்ரீ சிட்டி சார்பில் ரூ.90 லட்சமும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.1.20 கோடி முதலீட்டில் அனைத்து நவீன வசதிகளுடன் கண் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்ப் புத்தாண்டில்... மொத்தம் 10 ஏக்கரில் மூன்று ஆண்டுகளில் முழுமையான நவீன சிகிச்சை வசதிகளுடன் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை அமைய உள்ளது.

    முதல் கட்டமாக 20 படுக்கைகள் கொண்ட கண் மருத்துவமனை தமிழ்ப் புத்தாண்டு தினமான வரும் ஏப்ரல் 14-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் சித்தூரிலிருந்து 2,000 நோயாளிகளும் நெல்லூரிலிருந்து 500 நோயாளிகளும் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வருகின்றனர். தடாவில் சங்கர நேத்ராலயாவின் கண் மருத்துவமனை செயல்படத் தொடங்கியவுடன், ஆந்திரத்தைச் சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற சென்னை வரும் தேவை இருக்காது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ்.பாஸ்கரன், எல் அண்ட் டி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ்.சந்திரசேகர், அரவிந்த் பரிசோதனைக்கூட பங்குதாரர் ஆர்.ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai