சுடச்சுட

    

    சென்னை கொடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண் பொருள்கள் பதப்படுத்துதல் குறித்த இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    இது தொடர்பாக கல்லூரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: வேளாண் பொருள்களைப் பதப்படுத்துல், சந்தைப்படுத்துதல் குறித்த இலவச பயிற்சி வரும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

    பயிற்சியில் படித்த, படிக்காத இளைஞர்கள், விவசாயிகள், சுய உதவிக் குழுவினர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கலாம். வயது வரம்பு, கல்வித் தகுதி இல்லை. பயிற்சியின்போது, மதிய உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.

    வரும் ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும் விவரங்களுக்கு 9444155312 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai