சுடச்சுட

  

  வீட்டின் மாடியில் தோட்டம் அமைக்க விரும்புவோருக்கு சென்னையில் நவ.13-ஆம் தேதி பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

  சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் முகாமில் காய்கறிகள், பழவகைகள், மூலிகை உள்ளிட்டவற்றை வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து பராமரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

  முகாமில் கலந்து கொள்வோருக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். மேலும் இதுகுறித்த தகவல்கள் பெற 044-26263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai