சுடச்சுட

    

    இந்து மகாசபா அமைப்பினர் மீது நடிகர் எஸ்.வி.சேகர் புகார்

    By dn  |   Published on : 03rd September 2013 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தன்னைப் பற்றி அவதூறாக சுவரொட்டிகளை ஒட்டிய இந்து மகாசபா அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் எஸ்.வி.சேகர் சென்னைப் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் செய்தார்.

    இது குறித்து அவர் கொடுத்த புகார் மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: "மகாபாரதத்தில் மங்காத்தா' என்ற என்னுடைய நாடகம் 1980ஆம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது. இன்று வரை 1000 காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நகைச்சுவை நாடகத்துக்கு எதிராக இந்து மகாசபா என்ற அமைப்பினர் சென்னை முழுவதும் எனது புகைப்படத்துடன் மிக தரக்குறைவாக விமர்சித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடக்கும் என்னை இது மிகவும் புண்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அமைப்பின் மீதும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த புகார் மனுவை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் வி.வரதராஜுவிடம் எஸ்.வி.சேகர் வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai