அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கான திட்ட வரைப்படங்களைச் சரிபார்க்கும் மென்பொருளை (Pre Check Software) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து சி.எம்.டி.ஏ. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிறப்புக் கட்டடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கான திட்ட அனுமதி கோரும் விண்ணப்பங்களை அடடஅந எனும் மென்பொருளைக் கொண்டு பரிசீலிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. தற்போது, விண்ணப்பதாரர்கள் தங்களின் திட்ட அனுமதி கோரும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன், அவற்றுக்கான திட்ட வரைபடங்களைச் சரிபார்க்கும் மென்பொருள், குழும இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ஸ்ரீம்க்ஹஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ஞ்ர்ஸ்.ண்ய்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை விண்ணப்பதாரர்கள் தங்கள் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து, தங்களின் விண்ணப்ப நிலையை துரிதமாக சரிபார்த்துக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.