மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 48 தீர்மானங்கள் நிறைவேற்றம்: முதல்வருக்கு பாராட்டு

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மொத்தம் 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Published on
Updated on
1 min read

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மொத்தம் 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜூன் மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் புதிய மழலையர் பள்ளிகள் மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகள் தொடங்கியது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சென்னையில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள சுவர்ண ஜெயந்தி திட்டத்தின் மூலம் பணியாளர்களை தேர்வு செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவைத் தவிர, ஷெனாய் நகர் கலையரங்கத்துக்கு "அம்மா கலையரங்கம்' என பெயர் சூட்டும் தீர்மானம், பல்வேறு பகுதிகளில் புதிய எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவது மற்றும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மேற்கொள்வது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னையில் 2500 அடர்த்தி மிகு பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகள் கொள்முதல் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 48 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதல்வருக்கு பாராட்டு: மாமன்றக் கூட்டத்தில் சமூக வலைதளங்களில் ஹிந்தி மொழியை கட்டாயமாக்கிய மத்திய அரசைக் கண்டித்து கடிதம் எழுதி, உத்தரவை திரும்பப்பெறச் செய்தது, அம்மா உப்பு விற்பனையை தொடங்கியது மற்றும் அம்மா மருந்தகங்களை திறந்து வைத்தது போன்ற பணிகளுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் சிறப்பு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com