வண்டலூர் பூங்காவில் ஒரே வருடத்தில் 3 சிங்கவால் குரங்குக் குட்டிகள்

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த ஒரு ஆண்டுக்குள் 3 அரிய வகை சிங்கவால் குரங்குக் குட்டிகள் பிறந்துள்ளன.
வண்டலூர் பூங்காவில் ஒரே வருடத்தில் 3 சிங்கவால் குரங்குக் குட்டிகள்
Published on
Updated on
1 min read

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த ஒரு ஆண்டுக்குள் 3 அரிய வகை சிங்கவால் குரங்குக் குட்டிகள் பிறந்துள்ளன.

இது குறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்தி:

உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அரிய வகை விலங்குகளின் இனப்பெருக்கத்தைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக கடந்த ஒரு வருடத்துக்குள் 3 சிங்கவால் குட்டிகள் புதிதாகப் பிறந்துள்ளன. இதையடுத்து தற்போது பூங்காவில் உள்ள சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

சிங்கத்தைப் போன்ற முக அமைப்பு மற்றும் வாலினைக் கொண்ட இந்த வகை குரங்குகள் சோலைக் காடுகளில் அதிகம் வசித்து வருகின்றன. அழிந்து வரும் அரிய வகை விலங்கினங்களில் ஒன்றான இந்த குரங்குகள் தற்போது தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே உள்ளன. சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, வண்டலூர் பூங்காவில் இயற்கையான சூழலில் அடைப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த அடைப்பிடங்களில் ஆண் மற்றும் பெண் குரங்குகள் தனித்து விடப்படுகின்றன. இதன் விளைவாக வண்டலூர் பூங்காவில் இதுவரை 47 சிங்கவால் குரங்குக் குட்டிகள் பிறந்துள்ளன. வண்டலூரில் பிறந்த குட்டிகள் குவாஹாட்டி, சிம்லா, தில்லி, திருவனந்தபுரம், மைசூர், பரோடா உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள உயிரியல் பூங்காக்களுக்கு பரிமாற்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com