சென்னையில் மது போதையில் தகராறு செய்த இளைஞர் மர்மான முறையில் இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கே.கே.நகர் ராணி அண்ணாநகர் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ரா.கணேஷ் (27). தனியார் சாக்லேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், செவ்வாய்க்கிழமை அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார்.
பின்னர், தனது வீட்டின் அருகே நின்று கொண்டு அங்கு செல்வோரிடம் தகராறு செய்ததுடன், அவ்வழியாகச் சென்ற ஒரு சிறுவனையும் கணேஷ் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதை, அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் தட்டிக் கேட்டதால் கணேஷுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது, போதையில் நிலைத் தடுமாறி கிழே விழுந்த கணேஷுக்கு தலையில் பலத்த அடிபட்டுள்ளது. இந்நிலையில், சிறிது நேரத்தில் கணேஷ் இறந்து விட்டார். இது குறித்து கே.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.