மெட்ராஸ் ரேஸ் கிளப், குதிரைப் பந்தய நிர்வாகக் குழு ஆகியவற்றின் தலைவராக எம்.ஏ.எம். ராமசாமி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் செயலர் வெளியிட்டுள்ள செய்தி:
சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 2014-15-ஆம் ஆண்டுக்கான மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் தலைவராக எம்.ஏ.எம் ராமசாமி, துணைத் தலைவராக கே.பலராம தாஸ் ஆகியோர் போட்டியின்றித் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக கே.பலராம தாஸ், ஆர்.எம்.லட்சுமணன், முகமது யூசுப் ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடிப்பார்கள்.மேலும், அரசுத் தரப்பில் மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக அபூர்வ வர்மா, ககன்தீப் சிங் பேடி, முகமது நசிமுதீன், எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
குதிரைப் பந்தய நிர்வாகக் குழு: 2014-15-ஆம் ஆண்டுக்கான குதிரைப் பந்தய நிர்வாக குழுத் தலைவராக எம்.ஏ.எம் ராமசாமி, துணைத் தலைவராக கே.பலராம தாஸ் ஆகியோரும், உறுப்பினர்களாக முகமது யூசுப், ஏ.எல்.முருகப்பன், எம்.ரோசீவெல்ட் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.