சுடச்சுட

    

    பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்: முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

    By dn  |   Published on : 07th December 2014 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    thol

    இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்ட வலியுறுத்தி, முஸ்லிம் அமைப்புகள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

    உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, ஆண்டுதோறும் டிசம்பர் 6-ஆம் தேதி முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

    அதன்படி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயீ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.எம். பாக்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.

    பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.

    இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட வலியுறுத்தி, இந்து முன்னணியினர் சென்னையில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai