சுடச்சுட

    

    விபத்து இழப்பீடு வழங்க மறுப்பு தெரிவித்த தனியார் ஆம்னி பஸ் கண்ணாடியில் தார் பூசி சென்னை அடையாறில் லோக் சத்தா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    பெங்களூரில் இருந்து ஹைதராபாத்தில் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி ஆந்திரத்தில் விபத்தில் சிக்கியது. இதில் அந்த பஸ்ஸிலிருந்த 45 பேர் இறந்தனர். இந்த விபத்துக்கு காரணமாக அந்த தனியார் பஸ் நிர்வாகம், இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என லோக் சத்தா கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த தனியார் ஆம்னி பஸ் நிர்வாகம் இழப்பீடு வழங்காமல் இருந்தது.

    இதையடுத்து அக்கட்சியினர் சென்னை சோழிங்கநல்லூரில் திங்கள்கிழமை இரவு பெங்களூர் புறப்பட்ட அந்த நிறுவனத்தின் ஆம்னி பஸ்ஸில் தார் பூசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai